Welcome to my blog!

Meet the Author

Ut eleifend tortor aliquet, fringilla nunc non, consectetur magna. Suspendisse potenti.

Looking for something?

Subscribe to this blog!

Receive the latest posts by email. Just enter your email below if you want to subscribe!

Pages

Subscribe:

Ads 468x60px

Search

Custom Search

Total Pageviews

Thursday, 9 October 2014

எச்சரிக்கை !!!

இந்த தருணத்திலே ஒரு முக்கியமான செய்தியை உங்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டிய கட்டாய சூழ்நிலையில் நான் இருக்கிறேன்...
யாக்கோபு 1:5-6
"உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும்.
ஆனாலும் அவன் எவ்வளவாகிலும் சந்தேகப்படாமல் விசுவாசத்தோடே கேட்கக்கடவன்; சந்தேகப்படுகிறவன் காற்றினால் அடிபட்டு அலைகிற கடலின் அலைக்கு ஒப்பாயிருக்கிறான்."
மேற்கண்ட வசனத்தை நீங்கள் படித்து, அதன்படி ”எனக்கு ஞானத்தை கொடும் ஆண்டவரே !!” என்று ஜெபித்தால் அவர் நிச்சயமாக உங்களுக்கு பலன் அளிப்பார். நிச்சயம் வேதாகம உண்மைகளை புரிந்துகொள்ளும் ஆற்றலை உங்களுக்கு கற்றுக்கொடுப்பார். இதன் மூலமாக உங்கள் ஆத்துமாவையும், உங்கள் குடும்பங்களையும் நீங்கள் பாதுகாத்துக்கொள்ளலாம். கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பங்களையும் ஆசீர்வதிப்பாராக, கர்த்தருடைய சமாதானம் உங்களோடு இருப்பதாக !
ஒருவேளை இந்த பதிவை படித்த பிறகும், ஞானத்திற்காக ஜெபிக்காமல் உங்கள் அறியாமையின் காரணமாக உங்கள் ஆத்துமாக்களை நீங்கள் இழந்துபோனால், அந்த பாவம் என்மேல் சுமராதிருக்கும்
முதலில் இந்த சபையில் இணைய வேண்டும் என்கிற ஆர்வம் எனக்கு இருந்தது, பிறகு அந்த ஆர்வம் குழப்பமாக மாறியது, குழப்பம் பயத்தை உருவாக்கியது, அதன் பின்னர் நான் யாரையும் காப்பாற்ற முடியாது என்கிற எண்ணத்தோடு என்னை மட்டும் காப்பாற்றிக்கொள்ள திரும்பி வந்துவிட்டேன். குழப்பத்திற்கு என்ன காரணம்? பயத்திற்கு என்ன காரணம்? என்பதை விளக்கி சொல்ல வேண்டிய கட்டாயத்தை எசேக்கியேlல் 3:17-21 வசனங்கள் எனக்குள் உருவாக்கியது. என்னை தொடர்ந்து தொந்தரவு செய்து என் தூக்கத்தை கெடுத்துக்கொண்டே இருந்ததால், அக்காரணத்தை சொல்ல வேண்டிய கட்டாய சூழ்நிலைக்கு நான் தள்ளப்பட்டு இருக்கிறேன்.
18 சாகவே சாவாய் என்று நான் துன்மார்க்கனுக்குச் சொல்லுகையில், நீ துன்மார்க்கனைத் தன் துன்மார்க்கமான வழியில் இராதபடிக்கு எச்சரிக்கும்படியாகவும், அவனை உயிரோடே காக்கும்படியாகவும், அதை அவனுக்குச் சொல்லாமலும், நீ அவனை எச்சரிக்காமலும் இருந்தால், அந்த துன்மார்க்கன் தன் துன்மார்க்கத்திலே சாவான்; அவன் இரத்தப்பழியையோ உன் கையிலே கேட்பேன்.
19 நீ துன்மார்க்கனை எச்சரித்தும், அவன் தன் துன்மார்க்கத்தையும் தன் ஆகாத வழியையும் விட்டுத் திரும்பாமற் போவானாகில், அவன் தன் துன்மார்க்கத்திலே சாவான் நீயோவென்றால் உன் ஆத்துமாவைத் தப்புவிப்பாய்.
20 அப்படியே, நீதிமான் தன் நீதியை விட்டுத் திரும்பி, நீதிகேடு செய்யும்போதும், நான் அவன்முன் இடறலை வைக்கும்போதும், அவன் சாவான்; நீ அவனை எச்சரிக்காதபடியினாலே அவன் தன் பாவத்திலே சாவான்; அவன் செய்த நீதிகள் நினைக்கப்படுவதில்லை; அவனுடைய இரத்தப்பழியையோ உன் கையிலே கேட்பேன்.
21 நீதிமான் பாவஞ் செய்யாதபடிக்கு நீ நீதிமானை எச்சரித்தபின்பு அவன் பாவஞ்செய்யாவிட்டால், அவன் பிழைக்கவே பிழைப்பான்; அவன் எச்சரிக்கப்பட்டான்; நீயும் உன் ஆத்துமாவைத் தப்புவித்தாய் என்றார்.
எசேக்கியேல் 3:17-21
சரி, நான் முன்பே கூறியது போல யாக்கோபு 1:5-6 ஒரு மருந்து, அதற்கான நோயை விளக்கி கூற வேண்டிய கட்டாயமும் எனக்கு உண்டு. இதற்காக உங்களுக்கு சில 100 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சரித்திரங்களை விளக்கி கூற வேண்டிய கட்டாயம் உள்ளது.
Giordano Bruno என்கிற வான்வெளி அறிஞர் கூறிய அறிவியல் உண்மைகளை ஏற்றுக்கொள்ள முடியாத ரோம கத்தோலிக்க சபை, அவரை சிறையில் அடைத்து கொலை செய்தது. அதே காரணத்திற்காக Galileo என்கிற ஆராய்ச்சியாளரும் 7 ஆண்டுகள் சிறையில் இருந்து அங்கேயே மரணம் அடைந்தர். இதற்கு காரணம் அவர்களுக்கு வேதாகமத்தை நேரடியாக படிக்க தெரியாமல் Pope கூறியவற்றை உண்மை என்று நம்பியதால் தான்.
இதன் பின்னர் 718–1492 ஆண்டுகளில் சிலுவை போர் என்று கூறி கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் போரிட்டு, பலர் தங்கள் இன்னுயிரை இழக்க காரணமாக இருந்ததற்கும் வேதாகமத்தை சரியாக படிக்க தெரியாமல் போனது தான் காரணம். இவர்கள் வேதாகமத்தை அறியாததால் உயிர்களை கொன்றவர்கள்
அடுத்ததாக Heavenly Gate
இந்த திருச்சபையை சார்ந்தவர்கள், அவர்களுடைய சபை தலைவர் சொல்லைக் கேட்டு, வேதாகமத்தை சரியாக படிக்காமல், கூண்டோடு தற்கொலை செய்துகொண்டார்கள். இவர்களுடைய தலைவரும் தற்கொலை செய்துகொண்டார். வேதாகமத்தை அறியாததால் தங்களையே மாய்த்துக்கொண்டவர்கள் இவர்கள்.
சரி அது இருக்கட்டும், இப்போது விஷயத்துக்கு வருகிறேன்...
19 ஆம் நூற்றாண்டின்போது ஏறத்தாழ 4000 ரகசிய திருச்சபைகள் உருவாகின. ரகசிய திருச்சபைகள் என்றால்,
1) அவர்களுடைய சபைகளுக்கு சபை அங்கத்தினரின் அழைப்பு இல்லாமல் செல்ல முடியாது
2) வெளிப்படையாக மைதானங்களிலோ, தெருக்களிலோ அவர்கள் கூட்டங்கள் நடத்த மாட்டார்கள்.
அவை கோட்பாடு ரீதியாக சிறு சிறு வேறுபாடுகள் உடையனவாக இருந்தபோதிலும், அணுகுமுறைரீதியாக ஒரே மாதிரியான திருச்சபைகள் தான். யெகோவா சாட்சிகள், மார்மான்கள், Heavenly Gate, Unification Church, ICOC உள்ளிட்டவை.
இவர்கள் என்ன செய்வார்கள். பொதுவாக இந்த சபைகள் திரித்துவ கோட்பாட்டில் இருந்து விலகிச் செல்வார்கள், அல்லது இயேசுவின் குணாதிசயத்தில் ஏதாவது ஒன்றை வேறுபடுத்தி கூறுவார்கள். இது தவறா? என்று கேட்டால், இதில் ஆபத்து சற்று குறைவுதான், ஆனால் ஒருவர் இந்த கோட்பாட்டை பின்பற்ற தொடங்கிய பிறகு செயல்படுத்தும் அணுகுமுறையில் தான் உண்மையான ஆபத்து இருக்கிறது.
உதாரணமாக, யெகோவா சாட்சிகளின் கொள்கைப்படி அவர்கள் இயேசு கிறிஸ்து கடவுள் இல்லை, மிகாவேல் தூதன் என்று கூறுவார்கள், அவர்களிடம் சிறிது நேரம் பேசி, அவர்களுடைய கோட்பாட்டை நீங்கள் ஏற்றுக்கொண்டால், அதன் நீங்கள் தூண்டிலின் முனையில் உள்ள கொக்கியில் இருக்கும் புளுவை பிடித்த மீனைப்போல ஆகிவிடுவீர்கள்.
எப்படி?
1. நீங்கள் வேறு எந்த சபைக்கு சென்று இந்த போதனையை பற்றி கூறினாலும் அவர்கள் உங்கள் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆகவே உங்கள் சபைக்கு (இவ்விடத்தில் யெகோவாவின் சாட்சிகள்) சென்றால் மட்டும் தான் பரலோகம் செல்ல முடியும் என்று உங்கள் தலைவர்கள் கூறியதை நீங்கள் நம்பத் தொடங்குவீர்கள்,
2. வேதாகமத்தை தானாக படித்து புரிந்துகொண்டு, ஆண்டவரோடு தனிப்பட்ட உறவு கொள்வதை விட்டுவிட்டு, வேதாகமத்தை காட்டிலும் உங்கள் சபை தலைவர்கள் எழுதிய நூல்கள், பத்திரிக்கைகள் மற்றும் கடிதங்களை அதிகமாக படிப்பீர்கள்
3. இதுதான் நான் கூறிய ஆபத்து : ஒருவேளை உங்கள் குடும்பத்தில் இருக்கிறவர்கள் நீங்கள் உண்மை என்று கருதும் கோட்பாட்டை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், லூக்கா 14:26 மற்றும் மத்தேயு 10 ஆம் அதிகாரம் உள்ளிட்ட சில வசனங்களை மேற்கோள் காட்டி உங்களுடைய குடும்பத்தினரிடம் இருந்து பிரிந்து வாழும்படி அறிவுறுத்துவார்கள். (பரிசுத்த ஆவியானவரின் உதவியோடு வேதாகமத்தை நன்றாக படிக்கவும், அப்போது இது சரியான அணுமுறையா என்பதை கர்த்தர் உங்களுக்குள் இருந்து வெளிப்படுத்துவார் மத்தேயு 19:3-11, 1 கொரிந்தியர் 7: 12-13)
4. வேறு எந்த போதனையையும் கேட்க விடாமல் செய்வார்கள். அதோடு சபை தலைவர்கள் கூறுகின்ற கருத்துக்களுக்கு எதிர் கருத்து கூறுகிறவர்களை அவமானப்படுத்தி சபையை விட்டு வெளியேற்றுவார்கள்.
5. பொது இடங்களில் சென்று வேதாகமத்தில் நீங்கள் கற்றுக்கொண்ட சத்தியங்களை எடுத்துக் கூறும்படி சொல்ல மாட்டார்கள்.
மேற்கண்டவற்றில் என்ன தவறு என்று நீங்கள் கேட்கலாம்
1. இவை இயேசு கிறிஸ்துவும், அவருடைய சீடர்களும் பின்பற்றிய அணுகுமுறை அல்ல. தன்னை கொலை செய்ய வகைதேடிய யூதர்களின் ஜெப ஆலயங்களிலும், பொது இடங்களிலும் இயேசு கிறிஸ்துவும் அவருடைய சீடர்களும் பிரச்சாரம் செய்தார்கள்.
2. இது தீவிரவாதிகள் பயன்படுத்தும் ”மனோவசிய தொழில்நுட்பம்” (Mind Control Technology)
இதன் விளைவு என்ன?
1. வேதாகமத்தை சரியாக அறிந்துகொள்ளாமல் தேவையில்லாமல் உங்கள் குடும்பத்தை விட்டு பிரிவீர்கள், அல்லது வேறு ஒருவருடைய குடும்பம் பிரிய நீங்களும் ஒரு காரணமாக இருப்பீர்கள்

2. சத்தியத்தை அறியாத மக்களுக்கு சத்தியத்தை கொண்டு செல்ல வேண்டும் என்கிற பாரம் இல்லாததால் நீங்கள் அறிந்தும் சுட்டிக்காட்டாத பாவங்களை அவர்கள் செய்யும்போது, உங்கள் தலைமேல் அவர்களுடைய பாவம் சுமரும் (எசேக்கியேல் 3:17-21) .
அல்லது பிறர் முன்பாக இயேசு கிறிஸ்துவின் நாமத்தை அறிக்கை செய்யாததால், உங்களை குறித்து இயேசு கிறிஸ்து வெட்கம் அடைவார் (லூக்கா 9:26).
3. கடவுளுக்கும் உங்களுக்கு நேரடியான தொடர்பு ஏற்படாதவாறு, தலைவர்கள் கூறுவது தான் உண்மை என்று நம்புவீர்கள், அதனால் வேறு சில பாவங்களையும் செய்யக்கூடிய அபாயம் உண்டு. (மேலே கொடுக்கப்பட்டுள்ள ரோம கத்தோலிக்க சபையின் உதாரணத்தை பார்க்கவும்)
ஆகவே, இன்று உங்கள் வீட்டிற்கு சென்று “ஆண்டவரே, உமது வேதத்தை சரியாக உணர்ந்துகொள்ளும் ஞானத்தை தாரும் ! நான் சரியான பாதையிலே நடக்கிறேனா என்பதை எனக்கு வெளிப்படுத்தும் !” என்று ஜெபியுங்கள், இந்த ஜெபத்தை தினந்தோறும் செய்தால், உங்கள் வாழ்க்கையில் கர்த்தருடைய வழிநடத்துதலை நிச்சயம் காண்பீர்கள். கர்த்தர் தாமே உங்களோடு இருப்பாராக !
இவ்வாறு ஜெபிக்காதவர்களின் பாவம் என் மீது சுமராது இருக்கட்டும் !

0 comments:

Post a Comment

Blogs about BCC

Followers