கோயம்புத்தூர், கணுவாய் பேருந்து நிலையத்தில் இருந்து நடக்கும் தூரத்தில், அண்ணாநகர் என்கிற பகுதியில் உள்ள ஒரு சிறு குடிசையில் ப்ருன்ஸ்டாட் கிறிஸ்தவ சபை என்னும் இந்த ரகசிய சபை நடந்து வருகின்றது. 19 ஆம் நூற்றாண்டில் தொடங்கப்பட்ட பல ரகசிய சபைகளில் இதுவும் ஒன்று. அதில் மிகவும் சிறப்பான அம்சம் எனக்கு தெரிந்த மற்ற எல்லா சபைகளையும்விட இந்த சபை மிகவும் ரகசியமாக தங்கள் ஆராதனை இடத்தையும், கொள்கைகளையும் வைத்து இருப்பது தான். ஏறத்தாழ 30 வருடங்களுக்கும் முன்னதாகவே இந்த சபை கோயம்புத்தூரில் இருந்து வந்தாலும், நம்மில் பலருக்கும் யெகோவா சாட்சிகளை பரீட்சையமானது போல இந்த சபையின் பெயர் பரீட்சையமானது அல்ல. இதில் இவர்களுக்கு ஒரு பிரச்சனை இருக்கிறது. இவர்களுடைய கூட்டத்தை சார்ந்தவர்கள் இவர்களுக்குள் மட்டுமே தான் திருமணம் செய்துகொள்வார்கள். அதில் சில சமயம் ஆண்-பெண் எண்ணிக்கை குறையும்போது வேறு சபையை சார்ந்தவர்கள் தங்கள் சபையில் இணைந்தாலாவது தங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் நடக்கும் என்கிற எண்ணத்தில் இவர்கள் உங்களில் யாருக்காவது அழைப்புவிடுக்கவும் வாய்ப்பு உண்டு. ஆகவே இவர்களுடைய சபையில் இணைவதற்கு முன்பாக சில காரியங்களை தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். அவை என்ன என்பதை அவர்கள் மிகவும் ரகசியமாக பாதுகாப்பதால், அவர்களுடைய புத்தகங்கள் கூட வேறு இடங்களில் கிடைப்பது கிடையாது. மேலும் அவர்களுடைய போதனை இதுதான் என்று கூறுகிறவர்கள் மீது வழக்குகள் தொடரப்பட்ட சம்பவங்களும் உண்டு. ஆகவே அவர்களுடைய போதனை என்ன என்பதை நீங்களாகவே தெரிந்துகொள்ள கீழ்காணும் கேள்விகளை அவர்களிடம் கேளுங்கள்.
1. இயேசு கிறிஸ்துவின் மாம்சத்தில் இச்சை, பாவம் ஆகியவை இருந்தது என்றும், அவர் அவற்றை மேற்கொள்ள ஜெபம் செய்தார் என்றும் போதிக்கிறீர்களா?
2. உங்கள் சபையின் கொள்கைகளை நான் ஏற்றுக்கொள்கிறேன், இருப்பினும் என் உறவினரும் என் மனைவியும் அதை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் நான் அவர்களை பிரிந்து வாழ வேண்டுமா?
3. உங்களுக்கு வேதாகமத்தை முறைப்படி படிக்க தெரியுமா? அல்லது உங்கள் தலைவர்களின் புத்தகங்கள், கடிதங்கள் மற்றும் போதனைகளின் மூலமாக மட்டுமே வேதாகமத்தை புரிந்துகொள்கிறீர்களா?
4. உங்களுக்கும் பிற சபைகளுக்கும் என்ன வித்தியாசம்?
5. உங்களுக்கும் யெகோவாவின் சாட்சிகள், மார்மான்கள் உள்ளிட்ட ரகசிய சபைகளுக்கும் என்ன வித்தியாசம்?
6. (இதை நீங்களாகவே செய்து பாருங்கள்), ஒரு தாளில் ஒரு பக்கம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பெயரை எழுதிக்கொள்ளுங்கள், மறுபக்கம், அவர்களுடைய தலைவர்கள் கோரா ஸ்மித், லார்சன், கேப்ரியேல் மற்றும் மேத்யூ ஜார்ஜ் உள்ளிட்டவர்களின் பெயர்களை எழுதிக்கொள்ளுங்கள். ஆராதனை தொடங்கியதில் இருந்து எத்தனை முறை கடவுளுடைய பெயரை உச்சரிக்கிறார்கள் என்பதையும், எத்தனை முறை அவர்களுடைய தலைவர்களுடைய பெயரை உச்சரிக்கிறார்கள் என்பதையும் கவனியுங்கள்?
7. அவர்களுடைய பிள்ளைகளுக்கு நடத்தப்படும் குழந்தைகள் கூடுகையில் (நம்முடைய ஞாயிறு பள்ளி போலத்தான்) குழந்தைகள் எங்கு செல்ல வேண்டும் என்று ஜெபிக்க பழக்கப்படுத்தப்படுகிறார்கள் என்பதை கவனிக்கவும்.
மேற்கண்ட கேள்விகளை கேட்டால், நீங்களே அவர்களுடைய போதனை என்ன என்பதை புரிந்துகொள்ளலாம். இந்த சபைக்கு செல்லும் என் நண்பர்களின் ஆத்துமாக்களுக்காகவும், அவர்களுடைய குடும்பங்களின் நல வாழ்வுக்காகவும், இந்த வலைப்பூவை படிக்கிற ஒவ்வொருவரும் ஜெபிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிப்பட்ட ரகசிய சபைகளை குறித்து மேலும் சில வலைப்பூக்கள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
http://tamil-christian-cults.blogspot.com/
http://cultornotbcc.blogspot.com/
ianvincent.wordpress.com/2010/02/09/smiths-friends/
https://freedomofmind.com/Info/infoDet.php?id=212
http://tochristians.wordpress.com/…/cult-thinking-explained/
http://atheismthunderbear.blogspot.in/…/smiths-friendsbruns…
www.tb.no/…/smiths-venner-toppene-logn-oppspinn-og-konspira…
http://fivepts.blogspot.in/2006/08/is-this-cult.html
இவர்களுடைய பழைய பெயர்: "Smith's Friends"
இந்தியாவில் இவர்களுடைய பெயர் : Brunstad Christian Church
வேறு பெயர்கள் : "The Norwegian brothers", "Norwegian" "Smithianer", "The Kristelige menighet" (DKM) - "The Christian community", "Norwegians movement", "De Noorse Broeders":
நார்வே நாட்டில் வழங்கப்படும் பெயர்கள் : "Christian Family Association" , "club life", "Life eV association" , "eV The Christian Community" to; "Association Française chrétienne et de pays Francophones" (ACFF); "The Christian Church"
நார்வே நாட்டில் வழங்கப்படும் பெயர்கள் : "Christian Family Association" , "club life", "Life eV association" , "eV The Christian Community" to; "Association Française chrétienne et de pays Francophones" (ACFF); "The Christian Church"
0 comments:
Post a Comment