பிற ரகசிய சபைகளைப் போலவே இந்த சபையிலும், தங்கள் கோட்பாடுகளை ஏற்றுக்கொள்ளாத குடும்ப அங்கத்தினர்களிடம் இருந்து பிரிந்து வாழும்படியாக அறிவுறுத்தப்படுவதாக கேள்விப்பட்டேன். இது தொடர்பாக இந்த சபையை குறித்து மோசமான கருத்துக்களை வெளியிட்ட பல நபர்களை மின்னஞ்சல் மூலமாக சந்தித்தேன். அவர்களுள் சிலரைப் பற்றிய தகவல்கள் பின்வருமாறு
Lowell Strieker என்கிறவர் இந்த சபையை குறித்து எழுதிய புத்தகத்தின் முகவுரையில் Millard Melnyk என்கிற இந்த சபையின் முன்னால் அங்கத்தினரை குறித்து பாராட்டும் வண்ணமாக எழுதி இருக்கிறார்.
http://griess.st1.at/millard.htm
http://tochristians.wordpress.com/2012/10/17/cult-thinking-explained/
ஆனால், ஒரு குறிப்பிட்ட வலைப்பூவில் இச்சபையை குறித்து அந்த Millard Melnyk மோசமாக எழுதி இருந்தார். இவர் யார் என்று தெரியாமலேயே இவரிடம் பேசிக்கொண்டு இருந்தபோது சில திடுக்கிடும் தகவல்கள் எனக்கு கிடைக்கப்பெற்றன. இவரும் இவருடைய மனைவியும் ப்ருன்ஸ்டாட் சபையில் 20 ஆண்டுகளுக்கு மேல் அங்கத்தினர்களாக இருந்தவர்கள். இவர் இந்த சபையின் கோட்பாட்டை முழுமையாக ஏற்றுக்கொண்டவர். இப்போதும் கூட இவருக்கு இந்த சபையின் கோட்பாட்டில் கருத்து வேறுபாடு இல்லை. ஆனால், இந்த சபையின் தலைவர்கள் செலுத்திய ஆதிக்கம் இவருக்கு பிடிக்கவில்லை, முழுக்க முழுக்க இந்த சபை தலைவர்களின் பேச்சை மட்டுமே கேட்ட இவருடைய மனைவி, இவரைவிட்டு பிரிந்து வாழும்படி அறிவுறுத்தப்பட்டார். அதன் விளைவாக வயதான காலத்தில் தன் மகன்களோடு Millard Melnyk வாழ்ந்து வருகிறார். இவருடைய மனைவி, மனைவியின் சகோதரி மற்றும் அவரது குழந்தைகள் எல்லோரும் ப்ருன்ஸ்டாட் கிறிஸ்தவ சபைக்கு சென்று கொண்டு இருக்கிறார்கள்.
https://freedomofmind.com//Info/infoDet.php?id=212
அடுத்ததாக Friedrich Griess என்பவர் தன் மகள் Wiltrud குறித்து தனது வலைப்பூவில் எழுதி இருக்கும் கருத்துக்களை நீங்கள் பார்க்கலாம். நன்கு படித்து நல்ல நிலைக்கு வர வேண்டிய மகள், தன் குடும்பத்தை பிரிந்து, படிப்பையும் இழந்த கதை இது. இன்று வரை தன் மகள் திரும்பவும் தன்னோடு வந்து பேச வேண்டும் என்று தளராத வயதிலும் அவருடைய தந்தை காத்துக்கொண்டு இருக்கிறார்.
இவர்கள் மட்டுமல்ல முகப்புத்தகத்தில் The Church:Smith's Friends No More என்கிற பக்கத்தில் இந்த சபையை விட்டு வெளியேறிய, தங்கள் குடும்பத்தை இழந்த பலர் இந்த சபையில் நடைபெறும் தவறுகள், இவர்களுடைய தலைவர்களாகிய கோரா ஸ்மித், லார்சன் உள்ளிட்டவர்கள் செய்யும் ஊழல், BCC Financials என்று இவர்கள் நடத்தும் வங்கியில் நடைபெறும் ஊழல் ஆகியவற்றை திரைப்படமாக எடுக்க உள்ளதாக செய்திகள் வெளியிட்டு உள்ளனர்.
இந்த சபையின் மூலமாக 1000 பேருக்கு மேல் தங்கள் குடும்பங்களை பிரிந்து உள்ளதாகவும், பலர் இந்த சபையின் மூலமாக தங்கள் படிப்பையும் எதிர்காலத்தையும் தொலைத்துவிட்டதாகவும் கூறுகின்றனர். இந்த சபையின் அங்கத்தினர்களாக இருப்பவர்களில் சிலருக்கு இந்த சபையின் தலைமை அலுவலகம் இருக்கும், நார்வே நாட்டை சார்ந்த ப்ருன்ஸ்டாடுக்கு செல்ல வாய்ப்பு கிடைப்பதாகவும், அதே போல வெளிநாடுகளில் இருக்கும் இச்சபை அங்கத்தினர்கள் இந்தியாவுக்கு வந்து பணிசெய்யும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகின்றது.
எங்கள் சகோதரத்துவத்தை காட்டவே இதை நாங்கள் செய்கிறோம் என்று இச்சபையை சார்ந்தவர்கள் கூறுகின்றனர். இல்லை, இவர்கள் வெளிநாட்டிற்கு செல்ல ஆசைப்பட்டு இவ்வாறு செல்கிறார்கள், ஆனால் அங்கே குறைந்த செலவில் இவர்களுடைய தலைவர்களுக்கு அடிமைகள் கிடைக்கிறார்கள் என்று இச்சபையில் இருந்து வெளியேறுகிறவர்கள் கூறுகின்றார்கள்.

0 comments:
Post a Comment